கர்ப்பிணிகள் கவனத்திற்கு.. இதையெல்லாம் மறந்தும் செஞ்சிடாதீங்க.!  - Seithipunal
Seithipunal


தாய்மை அடைவது என்பது ஒரு தாய்க்கு மட்டுமல்ல, முழு குடும்பத்திற்குமான மைல்கற்களில் ஒன்றாகும். தாயை நன்றாக கவனித்துக்கொள்வதே வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு தொடக்கத்தை பெறுவதை உறுதி செய்வதற்கான சிறந்த வழி.

கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கும்  கருவில் வளர்ந்து வரும் குழந்தை ஆரோக்கியமான சூழலில் வளர உதவுவதற்காக கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி இங்கு பார்க்கலாம்.

செய்யக்கூடியவை :

கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் அதிகமான வைட்டமின்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் இவற்றை அதிகமாக எடுத்துக்  கொள்வதோடு தேவையான அளவு தண்ணீர் குடித்து நம் உடலில் நீர்ச்சத்து எப்போதும் அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் . 

தினமும் எட்டு மணி நேர கட்டாயம் தூக்கத்தை கடைபிடிக்க வேண்டும்..

கர்ப்பகாலத்தில் யோகா மற்றும் நடை பயிற்சி போன்ற இலகுவான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் தூக்கமின்மை உடல் வலி போன்றவற்றை குறைக்க உதவுகிறது. மேலும், கருவில் வளரும் குழந்தைக்கு ஆரோக்கியமான சூழல் கிடைக்கும்.

செய்யக்கூடாதவை:

குழந்தைக்கும் சேர்த்து சாப்பிடுவதாக எண்ணி அதிகப்படியான உணவு எடுக்கும் பழக்கத்தையும், அதிகம் செரிமானம் ஆகாத உணவுகளையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் . 

புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை கர்பகாலங்களில் தவிர்ப்பது நல்லது .

உடலுக்கு அதிகமான உஷ்ணம் தரக்கூடிய  பொருள்களையோ அல்லது இடங்களையோ தவிர்ப்பது நல்லது.

மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள் தவிர  பிற மருந்துகளை பயன்படுத்தாமல் இருப்பது நலம் .

கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு மட்டுமல்லமல் அந்த குடும்பத்திற்கும் பெரும் பொறுப்பு வருகிறது. கர்ப்ப காலத்திலும் அதற்குப் பின்னரும் நல்ல கவனிப்பு தாய்மார்களுக்கும், குழந்தைக்கும் முக்கியமானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pregnant Ladies should Not Do this


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->