வீட்டில் பிரசவம் பார்த்ததால் பெண்ணுக்கு நடந்த விபரீதம்...!!! 5- வது குழந்தை பெற்றெடுத்த போது...? - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் சிராஜூதீன் மனைவி அஸ்மா(35) தம்பதியர். இவர்களுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ள நிலையில் அஸ்மா மீண்டும் கர்ப்பமானார்.

இதில் அஸ்மாவுக்கு முதலில் 2 குழந்தைகளும் மருத்துவமனையில் வைத்து பிறந்துள்ளது. மேலும் மற்ற 3 வது மற்றும் 4-வது குழந்தை, அவருக்கு வீட்டில் வைத்தே பிறந்துள்ளது.இதில் 5-வது குழந்தையையும் வீட்டில் பிரசவம் பார்த்து பெற்றெடுக்க, கணவன்-மனைவி இருவரும் முடிவு செய்துள்ளனர்.

இதனால் 5-வது கர்ப்பமானதை அக்கம் பக்கதத்தினர் யாருக்கும் தெரிவிக்காமலிருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் அஸ்மாவுக்கு நேற்று வீட்டில் வைத்து குழந்தை பிறந்துள்ளது.

ஆனால் துரதிஷ்டவசமாக பிரசவத்தின் போது அஸ்மா பரிதாபமாக இறந்துவிட்டார்.அவருக்கு பிறந்த குழந்தை பெரும்பாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

இதில் பிரசவத்தின் போது அஸ்மாவுக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் சிராஜூதீன் தனது மனைவியை மருத்துவமனைக்கு  அழைத்துச் செல்லாமல் இருந்ததனால் தான் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

she gave birth at home to her 5th child and dead


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->