சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இல்லங்களில் வாழை மரத்தை கட்டும் அறிவியலை அறிவீர்களா நீங்கள்.!! தமிழனின் அறிவியல்.!!  - Seithipunal
Seithipunal


தமிழனின் ஒவ்வொரு அசைவிலும் பல அறிவியலுக்கு அப்பாற்பட்ட நன்மைகள் கலந்துள்ளது. இந்த உலகின் முதற்குலம் மற்றும் மூத்தகுலம் நாம் பிறந்த தமிழ் குலம். நமது முன்னோர்கள் அன்றளவில் செய்த அனைத்துமே இன்றுள்ள பல ஆராய்ச்சிகளுக்கு பின்னர் அதில் உள்ள மருத்துவத்தை உணர்ந்து வருகின்றனர். 

இன்றளவில் இருக்கும் பெரிய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் பல விதமான ஆராய்ச்சி மேற்கொண்டு., பல கோடிக்கணக்கான பணங்களை செலவழித்து பின்னர் முடிவை கண்டறிந்து., கண்டறியாமலும் இருக்கும் நிலையில்., மனித உடலுக்கு தேவையான மற்றும் உடலுக்கு நன்மை செய்யும் பொருட்கள்., சுற்றுப்புறத்திற்கு நன்மை ஏற்படுத்தும் மரங்கள் ஆகியவற்றை கண்டறிந்து நமக்கு அதன் நன்மையை சொல்லாமலேயே நமக்கு சொல்லிவிட்டனர். 

அந்த வகையில்., பல சுப நிகழ்ச்சிகளுக்கு நமது வீட்டிற்கு முன்னதாக வாழை மரம் வைக்கும் வழக்கத்தை அன்றைய தமிழன் நமக்கு சொல்லி சென்றான். அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் ஆச்சர்யத்தை யார் அறிவோம். இதனை கேட்டால் நம்மில் பெரும்பாலானோருக்கு விளக்கம் தெரியாத நிலையில்., அதனை தொடர்ந்து செய்து வருகிறோம். 

இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் உண்மையை இனி தெரிந்து கொள்வோம். விசேஷங்கள் கொண்டாடும் இல்லங்களில் வாழை மரம் கட்டுவது வழக்கமான ஒன்று. விசேஷ வீடுகளில் வாழை மரத்தை கட்டுவதன் மூலமாக., வாழை போல் வாழையடி வாழையாக தழைத்து வாழ வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கூற்று. 

இதில் உள்ள அறிவியல் என்னவென்றால்., பொதுவாக விசேஷ வீடுகள் என்றாலே குடும்பத்தினர் பலர் வந்து கலந்து கொள்வார்கள்., இதனால் அந்த இடமே திருவிழா போல திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த நேரத்தில் பலர் விடும் மூச்சுக் காற்றானது ஒரே இடத்தில் சூழ்ந்து மூச்சடைப்பு மற்றும் உஷ்ணம் அதிகரிக்க வழிவகுக்கிறது. 

இல்லங்களின் வாயிலில் மற்றும் பிற இடங்களில் வாழை மரத்தை வைப்பதன் மூலமாக நமது மூச்சுக் காற்றில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு வாழை மரத்தின் மூலமாக உறிஞ்சப்பட்டு., ஆக்சிஜன் அளவு குறையாமல் பார்த்துக் கொள்கிறது. இதனாலேயே சுப நிகழ்ச்சி நடைபெறும் விழாக்களில் வாழை மரம் கட்டுவது நமது முன்னோர்களால் செய்யப்பட்டு வந்துள்ளது. 

இதனை அறியாத பலர் மற்றும் அறிந்தும் அறிவில்லாத நபர்கள் தமிழனின் அறிவை மூடநம்பிக்கை என்ற பெயரில் நம்மை இழிவு படுத்தி வருகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை.... 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilan latest technology why banana tree function house in-front of place occupying


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->