வெளியானது தி டார்க் ஹெவன் படத்தின் டைட்டில் லுக்.!
the dark heaven movie title look released
இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் நகுல் நடிக்கும் படம் 'தி டார்க் ஹெவன்'. டீம் பி புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிக்கும் இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகிறது. இந்தப் படத்தில் புலனாய்வு செய்யும் காவல் அதிகாரியாக நகுல் நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக ரேணு சௌந்தர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சரண், கேசவன், ஜான் அலெக்ஸ், மனோஜ், ஆண்டனி பிரகன், டேனி தயால், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மணிகண்டன் பி.கே. ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைக்கிறார். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு செய்யும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளில் உருவாகிறது.
இந்த நிலையில், தி டார்க் ஹெவன் படத்திற்கான டைட்டில் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கான டைட்டில் லுக் போஸ்டரை சசிகுமார், பரத் மற்றும் சிபிராஜ் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
English Summary
the dark heaven movie title look released