வாழைக்கொத்து ஊட்டமளித்தல் பயிற்சி..விவசாயிகளுக்கு செய்முறை விளக்கமளித்த கல்லூரி மாணவிகள்! - Seithipunal
Seithipunal


தனியார் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு பயிர்களில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை மற்றும் நுண்ணூட்டக்கலவை மூலம் மண்ணின் தரத்தினை மேம்படுத்தி விளைச்சலை பெருக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் வாழைக்கொத்து ஊட்டமளித்தல் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தென்பள்ளிப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகள்  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளுக்கு சென்று விவசாயிகளுடன் இணைந்து விவசாயம் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி திருவண்ணாமலை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் 10 பேர் கொண்ட குழு வேளாண் கல்லூரி  மாணவிகள் ,கிராம வேளாண் பணி அனுபவம் திட்டம் கீழ்  கிராமப்புற விவரங்களை சேகரித்தனர். மேலும்  அங்கு உள்ள விவசாயிகளுக்கு பயிர்களில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை மேலும் வாழைக்கொத்து ஊட்டமளித்தல் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். மேலும் இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை மற்றும் நுண்ணூட்டக்கலவை மூலம் மண்ணின் தரத்தினை மேம்படுத்தி விளைச்சலை பெருக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Banana bunch nourishment training College students demonstrate to farmers


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->