ஒரே குடும்பத்தில் 6 பேர் விஷம் குடித்து தற்கொலை - நெல்லையில் பயங்கரம்.!!
six peoples attend sucide in nellai
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள கடம்பன்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பகிவர் இளநீர் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன் படி நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டதால், ராஜேஷ் கண்ணன் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். இதனால், வேதனை அடைந்த புவனேஸ்வரி தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவல் அறிந்து வீட்டுக்கு சென்ற ராஜேஷ் கண்ணன், தானும் விஷம் குடித்து விட்டு மயங்கியுள்ளார். உடனடியாக அவர்கள் 6 பேரையும் உறவினர்கள் மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 6 பேர் விஷம் குடித்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
six peoples attend sucide in nellai