10 ஆம் வகுப்பு மாணவர்களே இந்தக் கேள்வியை எழுதியிருந்தால் ஒரு மதிபெண்.!
one mark to 10th students for social exam
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், கடந்த 15 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இன்று முதல் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாவில் 4வது கேள்வியை அனைவரும் தேர்வு செய்திருந்தால் ஒரு மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை அறிவறுத்தியுள்ளது.
அதாவது 4வது கேள்வியில் உள்ள கூற்றும் காரணமும் முரணாக உள்ளதால் அதற்கு மதிப்பெண்கள் வழங்க கோரிக்கை எழுந்ததையடுத்து தேர்வுத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இன்று சமூக அறிவியல் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கிய நிலையில் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
one mark to 10th students for social exam