கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி.! ஆய்வில் வியக்க வைக்கும் தகவல்.! - Seithipunal
Seithipunal


மாடர்னா மற்றும் ஃபைசர் போன்ற எம்.ஆர்.என்.ஏ. வகை கொரோனா தடுப்பூசிகள் தோலில் ஏற்படக்கூடிய நோய்களின் அபாயத்தை போக்கும் வல்லமை கொண்டிருப்பதாக ஆய்வாளர் அரூப் இந்திரா தெரிவித்துள்ளார்.

தோல் புற்று நோயானது அமெரிக்காவில் மிகவும் பொதுவான ஒரு புற்று நோயாகும். தோல் புற்று நோயில், மெலனோமா மிகவும் ஆபத்தான வகையாகும். இது தோல் செல்களில் வீரியமிக்க செல்கள் உருவாகும் நிலையான மெலனோசைட்கள் எனப்பப்டும். மெலனோசைட்கள் உடலில் மெலனின் நிறமியை உற்பத்தி செய்கின்றன. இந்த மெலனின் நிறமிகள்தான் தோலின் நிறத்தை தீர்மானிக்கின்றன.

புற ஊதாக் கதிர்கள் தான் பெரும்பாலான தோல் புற்று நோய்க்கு காரணமாக அமைகின்றன. இந்த புற ஊதாக் கதிர்கள் தோலில் மெல்னின் உற்பத்தியை குறைத்து புற்று உண்டாக வழி வகுக்கின்றன.

Messenger RNA எனப்படும் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசிகள் தோலில் உள்ள TR1 எனும் புரத செல்கள் உருவாவதை தூண்டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் மெலோனின் உற்பத்திக்கு வழி ஏற்படுகிறது.

ஆதலால், கோடைக்காலங்களில் வெய்யிலில் நின்று வேலை செய்பவர்கள், தோல் புற்று நோய் அபாயம் உள்ளவர்கள் உள்ளிட்டோர் வருடத்திற்கு ஒரு முறை தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது என்றும், தோல் புற்று நோய்க்கு எதிராக ஒரு எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி இந்தியாவில் உருவாக்கப்பட்டு பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் ஆய்வாளர் அரூப் இந்திரா கூறியுள்ளார்.

உடலில் டி.என்.ஏ. அல்லது உட்கருவில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் உடலில் புரதத்தை உற்பத்தி செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பணியை எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசிகள் செய்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaccination restricts skin cancers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->