12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை - சத்தீஸ்கரில் பரபரப்பு.!
12 naxalites encounter in chateesgarh
வட மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகளவில் உள்ளது. இதனால், நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள காட்டுப்பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜப்பூர் மாவட்டத்தில் இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
கடந்த ஜனவரி 16-ந்தேதி தெற்கு பிஜாப்பூர் மாவட்டத்தின் காடுகளில் நடந்த என்கவுண்டரில் 12 நக்சலைட்டுகளும், கடந்த 2-ந்தேதி பிஜாப்பூா் மாவட்டத்தின் கங்களூர் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த என்கவுண்டரில் 8 நக்சலைட்டுகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
12 naxalites encounter in chateesgarh