ஊழல் மற்றும் சட்டவிரோதமாக சொத்துக்கள் வாங்கிய 120 அதிகாரிகள் பணி நீக்கம்; 39 பேருக்கு கட்டாய ஓய்வு..!
120 officials dismissed for corruption and illegal property acquisition 39 forced to retire
2020 முதல் 2024 வரையிலான 05 ஆண்டுகளில் ஊழல் செய்த மற்றும் சட்டவிரோத வகையில் சொத்துகளை வாங்கியவர்கள் என மொத்தத்தில் 120 அரசு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக ஒடிசா முதலமைச்சர் கூறியுள்ளார். ஒடிசா சட்டசபையில் பிஜு ஜனதா தள உறுப்பினர் துருபா சரண் சாஹூவின் எழுத்துப்பூர்வ கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இது குறித்து ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மஜ்ஜி கூறும் போது, 2020 முதல் 2024 வரையிலான 05 ஆண்டுகளில் ஊழல் செய்த மற்றும் சட்ட விரோத வகையில் சொத்துகளை வாங்கியவர்கள் என மொத்தத்தில் 120 அரசு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்றும், அவர்களிடம் இருந்து ரூ.59.47 கோடி பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பனி நீக்கம் செய்யப்பட்டவர்களில் குறிப்பாக 2023-ஆம் ஆண்டில் 31 அதிகாரிகளும், 2024-ஆம் ஆண்டில் 30 அதிகாரிகளும், 2020-ஆம் ஆண்டில் 27 அதிகாரிகளும் மற்றும் 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டாண்டுகளில் தலா 16 அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன், 2021-ஆம் ஆண்டில் 23 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டில் 13 பேருக்கும், 2020, 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் தலா ஒருவருக்கும் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.
English Summary
120 officials dismissed for corruption and illegal property acquisition 39 forced to retire