12 வது உலக தமிழ் மாநாடு புதுசேரியில்; ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு..!
12th World Tamil Conference in Puducherry
12 வது உலக தமிழ் மாநாடு புதுச்சேரியில் ஜூலை மாதம் இறுதி வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கிய தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளனர்.
புதுச்சேரியில் உலக தமிழ் மாநாடு நடத்தப்படும் என, அம்மாநில முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன் படி உலக தமிழ் மாநாட்டுக்கான முன்னேற்பாடுகளை கலை பண்பாட்டு துறை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், ஜூலை மாத இறுதி வாரத்தில் 12-வது உலக தமிழ் மாநாடு நடத்த புதுச்சேரி அரசு முடிவு செய்து, இது தொடர்பாக உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கான இந்தியாவின் கிளை நிர்வாகிகள் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பில், சபாநாயகர் செல்வம், கவர்னரின் செயலர் மணிகண்டன், கலை பண்பாட்டுத் துறை செயலர் நெடுஞ்செழியன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த 12 வது உலக தமிழ் மாநாட்டில் ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும், உலகம் முழுவதிலும் இருந்து 05 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
12th World Tamil Conference in Puducherry