ராஜஸ்தான்: கட்டுமானத்தில் இருந்த வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி.! 3 பேர் காயம் - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று மாலை கட்டப்பட்டு வரும் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். 

ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் ஹனுமன்கர் சாலையில் உள்ள ரித்தி சித்தி காலனி-3 இல் கட்டுமானத்தில் இருந்த வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து சுமார் இருபது அடி நீளமுள்ள பால்கனியின் மேற்கூரை திடீரென இடிந்து கிழே விழுந்து உள்ளது.

அப்பொழுது ஐந்து பேர் பால்கனியில் நின்று கொண்டிருந்த நிலையில், பால்கனி இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும் காயமடைந்த மூன்று தொழிலாளர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பலியானவர்கள் பவன் (42), ஓம்ஜி (50) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக நில உரிமையாளர் மற்றும் ஒப்பாந்ததாரர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 killed 3 injured balcony of under construction house collapsed in rajasthan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->