கேரளாவில் பரவும் வித விதமான காய்ச்சல்.. ஒரே மாதத்தில் 2 லட்சம் பேர் பாதிப்பு..!! - Seithipunal
Seithipunal


கேரளாவில் பல்வேறு விதமான தொற்று நோய்கள் பரவி வருகின்றன. தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே அங்கு காய்ச்சல் பரவத் தொடங்கி விட்டது. குறிப்பாக பன்றிக் காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகளவில் பரவத் தொடங்கின.

இந்நிலையில் தற்போது அங்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து தற்போது காய்ச்சல் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் 2 லட்சமாக உயர்ந்துள்ளது.

முன்னதாக ஜூன் மாத ஆரம்பத்தில் டெங்குவால் 1,912 பேரும், எலி காய்ச்சலால் 253 பேரும், மஞ்சள் காமாலையால் 500 பேரும், H1 N1 தொற்றால் 275 பேரும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களில் 18 பேர் எலி காய்ச்சலிலும், 3 பேர் டெங்குவிலும், 5 பேர் மஞ்சள் காமாலையிலும், 3 பேர் H1 N1 தொற்றிலும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று வரை இந்த ஜூன் மாதத்தில் மட்டும் 2 லட்சத்து 18 ஆயிரத்து 684 பேர் பல்வேறு வகையான காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதிலும் நேற்று ஒரே நாளில்  10 ஆயிரத்து 914 பேர் காய்ச்சல் தொற்றுக்கு பாதிக்கப் பட்டுள்ளனர். 

இதையடுத்து கேரளாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக குவிந்துள்ளனர். இந்நிலையில் அங்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் நோய்த் தொற்று மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப் படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 Lakh People Suffered By Different Fever in Kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->