மத்திய அரசின் நிறுவனங்களில் போலி ஆவணங்கள் மூலம் வேலையில் சேர்ந்த 200 வடமாநிலத்தவர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் சேர 200 வடமாநிலத்தவர்கள் போலி சான்றிதழ் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் அஞ்சலக துறை, இந்தியன் ஆயில், சிஆர்பிஎப் உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வந்தாலும் இந்த நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை என புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் மத்திய அரசின் யுபிஎஸ்சி சான்றிதழ் சரிபார்ப்புகாக தமிழக அரசு தேர்வுகள் துறைக்கு அனுப்பிய பல சான்றிதழ்கள் போலியானவை என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் படித்தது போல போலி சான்றிதழ்களை காட்டி 200 வடமாநிலத்தவர்கள் பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது.

போலி சான்றிதழ் அளித்தவர்கள் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க பரிந்துரைத்துள்ள அரசு தேர்வுகள் துறை. அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பரிந்துரை செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

200 Northerners employed in Central Government Institutions with fake documents


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->