ஆந்திராவில் தமிழகத்தை சேர்ந்த 25 பேர் அதிரடி கைது.!! - Seithipunal
Seithipunal


செம்மரம் கடத்தியதாக 25 தமிழர்கள் கைது.!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இயங்கும் செம்மர கடத்தல் சிறப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள பிஞ்சதும்மல வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இரவு ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தினர்.

அப்பொழுது பிஞ்சதும்மல வனப்பகுதியில் ஒரு கும்பல் செம்மரம் வெட்டுவது செம்மர கடத்தல் தடுப்பு போலீசாரின் கண்ணில் தென்பட்டது. அவர்கள் போலீசார் வருவதை கண்டதும் சம்பவ இடத்திலிருந்து தப்ப முயன்றனர். அப்பொழுது போலீசார்  20 பேரை விரட்டிப் பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 5 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சிலர் தப்பியோட நிலையில் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று சித்தூர் மாவட்டம் பீலேர் பகுதியில் 19 செம்மரக் கட்டைகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சித்தூரில் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் செம்மரக்கடத்தல் சம்பவத்தில் 25 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25 people from TamilNadu arrested in Andhra Pradesh


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->