குஷியில் இளைஞர்கள்! புதியதாக தொழில் தொடங்குவோருக்கு மாதம் ரூ.25,000 உதவித்தொகை! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் புதியதாக தொழில் தொடங்குவதற்கு மாதம் ரூபாய் 25 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கர்நாடகா அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவிலேயே அதிக ஸ்டார்ட் அப்புகளை கொண்ட நகரமாக பெங்களூர் இருந்து வருகிறது. தங்களின் வருமானம் தருகின்ற நிலையான வேலையை உதறிவிட்டு ஸ்டார்ட் ஆப் தொடங்க பலர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில் கர்நாடக அரசு புதிய திட்டமானது அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கர்நாடகா ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்ததாவது, புதிய தொழில்களை தொடங்குவது என்பது ஒரு ஆபத்தான சமாச்சாரம். அதும் நிலையான வேலையை விட்டுவிட்டு சொந்த தொழில் இறங்க பலர் யோசிக்கின்றனர்.

பலர் புதிய தொழில் தொடங்குவதில் பல சமயங்களில் பொருளாதாரத்தைகளில் சிக்கிக் கொண்டு தவிக்கின்றனர். அவர்களின் சுமையை குறைக்கும் வகையில் மாதாந்திர உதவி தொகையாக ரூ. 25000 வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் புதியதாக தொழில் முனைவோர்கள் அன்றாட செலவுகளைப் பற்றி யோசிக்காமல் தொழிலை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25 thousand rupees per month stipend for starting a new business in the state of Karnataka


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->