சுற்றுலா சென்ற போது நேர்ந்த சோகம் - நிலச்சரிவில் 30 தமிழர்கள் சிக்கி தவிப்பு.!
30 tamilnadu peoples trapped landslide in uttarkant
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேர் கடந்த 3ம் தேதி வேனில் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். இதையடுத்து அவர்கள், உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் என்ற பகுதியில் இருந்து மலைப்பகுதி வழியாக வேனில் திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது, தவாகாட் – தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், வேனில் இருந்த பயணிகள் கீழே இறங்க முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் தொடர்ந்து நிலச்சரிவு அபாயம் இருந்து வருவதால் அவர்கள் தொடர்ந்து வருவது பாதுகாப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.
நிலச்சரிவு குறித்து உடனடியாக உள்ளூர் போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் படி போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றுள்ளனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து, கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கடலூர் ஆட்சியர் ஆகியோர் அங்குள்ள நிலைமையை தொலைபேசி மூலம் கேட்டு வருகின்றனர்.
மேலும், உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி, தமிழர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
English Summary
30 tamilnadu peoples trapped landslide in uttarkant