எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக..இந்திய மீனவர்களை கைது செய்த பாகிஸ்தான் கடற்படை.! - Seithipunal
Seithipunal


எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய மீனவர்கள் 31 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி பாகிஸ்தான் கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த 18ஆம் தேதி பாகிஸ்தான் கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, இந்தியாவை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததுள்ளனர்.

இதனையடுத்து அவர்களின் 5 படகுகள் மற்றும் முப்பத்தி ஒரு இந்திய மீனவர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் அனைவரும் கராச்சி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையே மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

31 fisherman arrested Pakistan coastal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->