பரபரப்பு! பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் பலி!
4 security forces killed in terrorist attack
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 4 பாதுகாப்பு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியத்தில் 4 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று இரவு முழுவதும் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
மறைந்திருந்த பயங்கரவாதிகள் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். அதற்கு உடனடியாக பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்பு படை வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று இரவு முதல் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் ஒரு அதிகாரி உட்பட 4 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 5 வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாதம் இல்லாத பகுதியான ஜம்பு முழுவதும் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு பகுதியில் கடந்த 32 மாதங்களில் இதுவரை 48 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
4 security forces killed in terrorist attack