ஒடிசா ரயில் விபத்து.. நாடு முழுவதும் 43 ரயில்கள் ரத்து - ரயில்வே துறை அறிவிப்பு.!
43 trains are cancelled by oddisa accident
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 10 பெட்டிகள் சரிந்து அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ரயில் பெட்டிகள் கவிழ்ந்திருந்த தண்டவாளத்தில் அதிவிரைவு ரயிலான எஸ்வந்த்பூர் ஹவுரா ரயில் கவிழ்ந்து கிடந்த ரயில் பெட்டிகள் மீது மோதியது. இதில் ஹவுரா ரயிலில் நான்கு பெட்டிகள் தடம் புரண்டு சரிந்தன. இந்த இரண்டு பயணிகள் ரயிலுடன் மூன்றாவதாக சரக்கு ரயில் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கொடூர ரூபத்தில் இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 900க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் 2004க்கு பிறகு உலக அளவில் மிக மோசமான ரெயில் விபத்தாக ஒடிசா பாலசோர் ரெயில் விபத்து பதிவாகியுள்ளது. தற்போது வரை 207 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 2004 சுனாமியின் போது இலங்கையில் 1700 பேர் உயிரிழந்த மாதாரா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து தான் மிக கோரமான ரயில் விபத்தாக உள்ளது.
இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக இதுவரை 43 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்குப் பிறகு 38 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
இதில், தமிழகத்தில் மட்டும் நேற்று முதல் இன்று வரை தமிழகத்தில் இருந்து 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய கோரமண்டல் ரயில் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும், முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் முழுமையாக திருப்பி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு கவுண்டர்கள் அமைத்து கட்டணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து இருப்பதால் நேரடியாக வங்கி கணக்கிற்கு கட்டண தொகை திரும்ப வழங்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
English Summary
43 trains are cancelled by oddisa accident