சூப்பர் ஜாலி! மோடி தலைமையில் அறிக்கை!!! ரூ.522.43 கோடி தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க ஒப்புதல்!!!
Report led by Modi Approval allocate Rs 522point43 crore Tamil Nadu
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் பலப் பகுதிகள் நிலச்சரிவு, வெள்ளம், மேகவெடிப்பு, புயல் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதில் தமிழ்நாடு மாநிலம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்கள் அதாவது இமாச்சல பிரதேசம், புதுச்சேரி, பீகார் ஆகிய மாநிலங்களும் பாதிக்கப்பட்டது.
இதற்கு கூடுதல் மத்திய நிதி உதவியாக ரூ.1280.35 கோடி ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் தமிழகத்திற்கு ரூ.522.34 கோடியும், பீகாருக்கு ரூ.588.73 கோடியும், இமாச்சல பிரதேசத்திற்கு ரூ.136.22 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.33.06 கோடியும் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இயற்கை பேரிடர்களைச் சந்தித்த பீகார், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றுடன் தோளோடுதோள் நின்றதாக பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
English Summary
Report led by Modi Approval allocate Rs 522point43 crore Tamil Nadu