கோவிலில் 150 வருட பழமையான மரத்தை அகற்றல் தவறு !!! - ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த வாலிபருக்கு கிடைத்த ஷாக்
Removing 150yearold tree from temple wrong man shock who filed petition High Court
சென்னை மாநகர் பழைய வண்ணாரப்பேட்டையில் அறநிலையத்துறை மணிகண்டன் 3-வது தெருவிலுள்ள பார்வதி அம்மன் கோவிலில் ரூ.17.30 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்யவுள்ளதாக அறிவித்தது.

அதே பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர், இந்தத் திருப்பணியில் ஒரு பகுதியாக கோவிலிலுள்ள 150 ஆண்டு பழமையான ஆலமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது," திருப்பணி என்ற பெயரில் கோவிலின் தல விருட்சமான 150 ஆண்டு பழமையான ஆலமரத்தை அகற்ற தடை விதிக்க வேண்டும் "என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி முகமது ஷபிக் மற்றும் தலைமை நீதிபதி ஏ.கே. ஸ்ரீராம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெகநாதன், அரச மரத்தை அப்பகுதி மக்கள் புனிதமாக கருதுவதால், அதை அகற்றுதல் தவறு என்று வாதிட்டார்.
இதில் இந்து அறநிலையத்துறை சார்பில் வாதிட்டவர் கூறியதாவது,"சம்பந்தப்பட்ட மரம் கோவிலின் மதில் சுவரில் ஊடுருவி உள்ளதால் புதிய கோவிலைக் கட்டுவதற்கு மரத்தின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே அகற்றப்படும். பசுமையான சூழலைப் பாதுகாப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விழிப்புடன் உள்ளனர்.
மரம் அழியாமல் இருக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் "என்று தெரிவித்தார் .இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
English Summary
Removing 150yearold tree from temple wrong man shock who filed petition High Court