பொள்ளாச்சி பாலியல் வழக்கு - 9 பேரிடம் இன்று விசாரணை.!!
today hearing pollachi harassment case in coimbatore
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி மாணவிகளை வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து அவர்களை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு சம்பந்தமாக 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ.யும் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை இரண்டு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அரசு தரப்பு சாட்சியங்கள் முடிந்த நிலையில், இருதரப்பிடமும் கேள்விகள் கேட்டு பதில் பெறுவதற்காக இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதற்காக குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் சிறப்பு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டதையடுத்து வழக்கு விசாரணையை 9-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
English Summary
today hearing pollachi harassment case in coimbatore