பெரும் சோகம்! வெள்ளத்தில் அழிந்த கிராமம்! 53 பேர் மாயம்!
53 people lost in floods in Himachal Pradesh
மேக வெடிப்பில் சிக்கி ஒரு கிராமமே அழிந்து கிராமத்தில் இருந்த அனைத்து வீடுகளும் வெள்ளத்தில் அடித்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பருவ மழை தொடங்கி பல்வேறு மாநிலங்களில் கன மழை பெய்து பெய்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் கனமழையில் சிக்கி தவித்து வருகின்றது. சமீபத்தில் கேரள மாநிலம் வடநாடு பகுதியில் பெய்த கன மழை காரணமாக வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நில சரிவில் பலியானார் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வயநாடு இயற்கை பேரிடர் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை இரவு மேக வெடிப்பு காரணமாக பெய்து கனமழையால் ஒரு கிராமம் முழுவதும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அந்த கிராமத்தில் ஒரே ஒரு வீடு மட்டுமே வெள்ளத்தால் அடித்து செல்லப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து சமாஜ் கிராமத்தை சேர்ந்த அனிதா என்பவர் தெரிவித்ததாவது, புதன்கிழமை இரவு அனைவரும் அவரது வீட்டுக்களில் உறங்கிக் கொண்டிருந்தோம். அப்போது பலத்த இடி இடித்தபோது வீடு உலுக்கியது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அனைவரும் கோவில் அருகில் சென்று தங்கியிருந்தோம். இறுதியில் என் வீடு மட்டுமே பேரழிவில் இருந்து தப்பியது ஆனால் மற்ற அனைத்து வீடுகளும் அடித்து செல்லப்பட்டு விட்டன என்று தெரிவித்தார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தெரிவித்ததாவது, தற்போது ராம்பூரிலிருந்து நான் உயிர்பிழத்தென். அதிகாலை 4 மணிக்கு இங்கு வந்தேன் எல்லாம் அழிந்து விட்டன என் குடும்பத்தினரை தேடுகிறேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இதனிடையில் மேக வெடிப்பு காரணமாக சேதமான ராம்பூர் மற்றும் சமாஜ் பகுதிகளை இணைக்கும் சாலை மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேகவெடிப்பில் சனிக்கிழமை வரை 53 பேர் மாயமாக்கி உள்ளதாகவும் ஆறு பேரின் உடல்கள் மிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் மேத வெடிப்பு காரணமாக உயிரிழந்தவர்களுக்கு வீடுகளை இழந்தவர்களுக்கும் நிதி உதவி விரைவில் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
English Summary
53 people lost in floods in Himachal Pradesh