தெலுங்கானாவில் சோகம்; 04 அடுக்குமாடி இடிந்து விழுந்ததில் 07 பேர் பலி; இடிபாடுகளில் இன்னும் சிலர் சிக்கிருக்கலாம் என தகவல்..! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் பத்ராச்சலம் மாவட்டம், பத்ராத்ரி கொதகுடும் பகுதியில், 04 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 07 பேர் பலியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அப்பகுதியில் இருந்த பழைய 02 மாடி கட்டிடம் மீது மேலும் 04 மாடிகளை புதிதாக கட்டியுள்ள நிலையில், இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. 

கட்டுமானப் பணிகள் பாதியில் இருந்தபோது எடை தாங்காமல் 06 மாடி கட்டிடம் மொத்தமாக சரிந்து விழுந்துள்ளது.  இதன் போது உள்ளே வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் உட்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.

இடிபாடுகளில் உள்ளே இன்னும் தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், அங்கு மீட்பு பணி முழு வீச்சில் நடந்துவருவதோடு, குறித்த சம்பவம் தொடர்பில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த அசம்பாவிதம் நடைபெறுவதற்கு பழைய கட்டிடத்தில் அங்கீகரிக்கப்படாத கூடுதல் கட்டுமானமும், தரமற்ற கட்டுமானப் பொருட்களும் விபத்துக்கு வழிவகுத்துள்ளதாக கூறப்படுகிறது.   பழைய இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் நான்கு தளங்கள் கட்டப்பட்டு வந்ததே விபத்துக்கு காரணம் என் உள்ளூர்வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

7 dead in Telangana as 4 apartment buildings collapse


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->