வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து 08-ஆம் தேதி போராட்டம்: திருமாவளவன் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம் இன்று சொல்லக்கூடிய அளவுக்கு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை பாஜ அரசு நிறைவேற்றியுள்ளது என இன்று திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று பேட்டியளித்துள்ளார்.

அங்கு இது குறித்து அவர் பேசுகையில்;  தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை அரங்கேற்றியுள்ளனர். இது இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து பீகாரில் 02 எம்பிக்கள் பதவி விலகியுள்ளனர். இது கூட்டணி கட்சிகளுக்கு பெரிய சவுக்கடியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒன்றிய அரசின் மத விரோத போக்கை கண்டிப்பதோடு, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம் என்று திருமா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஒன்றிய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விசிக சார்பில் வரும் 08-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும், திமுக அரசு பதவியேற்றது முதல் நீட் எதிர்ப்பை முழு மனதோடு கடைபிடித்து வருகிறது என்றும், விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் ஒன்றிய ஆட்சியாளர்கள் தான் என்று அவர் விமான நிலைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Protest on the 8th against the Waqf Amendment Bil Thirumavalavan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->