75-வது சுதந்திர தினம்.. மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் 75-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்திய சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் இன்றும் சற்று நேரத்தில் இந்திய தேசியக்கொடியை ஏற்றி உரையாற்றுகிறார்.

 

இந்த நிலையில், செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்ற செல்வதற்கு முன் பிரதமர் மோடி டெல்லி ராஜ்கட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 

தேசியக்கொடி வடிவிலான தலைப்பாகை அணிந்து பிரதமர் மோடி மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்ற பிரதமர் மோடி புறப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

75th Independence Day Prime Minister Modi pays tribute at Mahatma Gandhi memorial


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->