ஒரே மாதத்தில் 80 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் - காரணம் என்ன?
80 lakhs whatsapp accounts close in india
இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தி வரும் சமூக வலைதளங்களில் ஒன்றாக திகழும் வாட்ஸ்அப்பில் பயனர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய அப்டேட்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்ட மெட்டா ஏ.ஐ. சாட்டிங் உள்ளிட்ட அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
அதே சமயம், வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி பல்வேறு மோசடி சம்பவங்கள் அரங்கேறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதையடுத்து மோசடி செயல்களை கட்டுப்படுத்தி, பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, வாட்ஸ்அப் செயலியின் தாய் நிறுவனமான 'மெட்டா', பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் இந்தியாவில் ஒரே மாதத்தில் 80 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை 'மெட்டா' நிறுவனம் முடக்கியுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:- "தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 4(1)(d) மற்றும் பிரிவு 3A(7) ஆகியவற்றின்படி, இந்தியாவில் சுமார் 80 லட்சத்து 45 ஆயிரம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கணக்குகளை முடக்கும் நடவடிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் ஆகஸ்ட் 31-ந்தேதி வரை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
80 lakhs whatsapp accounts close in india