90,000 கைதிகள் புனித நீராடல் !!! சிறைக்கு கொண்டு வந்த திரிவேணி சங்கம நீர்....
90000 Prisoners Holy Bath Triveni Sangama water brought to jail
உத்திரபிரதேச மாநில பிரயாக்ராஜ் நகரில், உலகின் மிகப்பெரிய ஆன்மீகச் சங்கமமான மகா கும்பமேளா மூன்று நதிகள் சங்கமிக்கும் "திரிவேணி சங்கமம்" என்ற இடத்தில் ஜனவரி 13 ஆம் தேதி பக்தர்களால் கோலாகலமாகத் தொடங்கியது. இது மகா சிவராத்திரி நாளான வருகிற 26 ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இந்த மகா கும்பமேளாவில் கலந்துக் கொள்ள உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைத் தந்துப் புனித நீராடி வருகின்றனர். இதில் இதுவரை 56 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.

சிறைத்துறை அதிகாரிகள்:
இந்நிலையில் உத்தரபிரதேச மாநில சிறைத்துறை அதிகாரிகள் திரிவேணி சங்கமத்தின் புனித நீரை லக்னோ, அலிகார் மற்றும் அயோத்தி சிறைக்குக் கொண்டு வந்தனர். இதில் உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள 25 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 90 ஆயிரம் கைதிகள் மகா கும்பமேளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரில் நீராடினர். மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில்," திரிவேணி சங்கமம் தண்ணீர் வழக்கமான நீரில் கலந்து சிறிய தொட்டிகளில் சேமிக்கப்பட்டது. கைதிகள் புனித நீராடவும் சிறையிலேயேப் பிரார்த்தனைச் செய்யும் அனுமதிக்கப்பட்டனர் " எனத் தெரிவித்தார்கள்.
அமைச்சர் தாரா சிங் சவுகான்:
இதைத் தொடர்ந்து லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறைத்துறை அமைச்சர் தாரா சிங் சவுகான் தெரிவிக்கையில், கைதிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து சுமார் 90 ஆயிரம் கைதிகளுக்குப் புனித நீராடினர். மேலும் சிறைக் கண்காணிப்பாளர் உதய் பிரதாப் மிஸ்டரா தெரிவிக்கையில், அனைவரும் கருத்து வேறுபாடின்றி 757 கைதிகளும் புனித நீராடியதாக தெரிவித்தார்.
English Summary
90000 Prisoners Holy Bath Triveni Sangama water brought to jail