தன்னிச்சையாக செயல்பட்டார் ஆ.ராசா! மீண்டும் இன்று விசாரணை! - Seithipunal
Seithipunal


ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளை செவிசாய்க்காமல் தன்னிச்சையாக செயல்பட்டார் ஆ.ராசா!

நாட்டையே உலுக்கிய 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் மத்திய அமலாக்கத்துறை வழக்கு தொடுத்து இருந்தது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உட்பட 14 பேரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கண்ணா அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது.

சிபிஐ சார்பில் வழக்கறிஞர் மீரட் ஜெயின் ஆஜராகி " 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறை கேட்டால் அரசுக்கு 22 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு கடந்து வந்த பாதை குறித்து இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பையும் தொடக்கத்திலேயே தெளிவாக குறிப்பிட்டுள்ளது. 

ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்த பொழுது தகுதியற்ற நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்துள்ளார். அவ்வாறு வழங்கப்பட்ட அலைக்கற்றை உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உட்பட யாரையும் ஆலோசிக்காமல் ஆ.ராசா தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார். தனக்கு வேண்டியவர்களின் நிறுவனங்களுக்கு முறைகேடாக அலைக்கற்றையினை ஒதுக்கீடு செய்துள்ளார் என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தினை ஏற்றுக் கொண்ட நீதிபதி விசாரணையை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைத்துள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Raja acted spontaneously Investigate again today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->