திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல்.. மகா கும்பமேளாவில் 30 பேர் காயம்! - Seithipunal
Seithipunal


அமாவாசை தினமான இன்று மகா கும்பமேளாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் அதிகாலை ஆயிரக்கணக்கானோர் புனித நீராட  திரண்டதால் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் 30 பேர் காயமடைந்தனர் என முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. 

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா திகழ்ந்துவருகிறது . இந்த கும்பமேளாவில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் மற்றும் பிரபலங்கள் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

இந்நிலையில், அமாவாசை தினமான இன்று மகா கும்பமேளாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் அதிகாலை புனித நீராட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.இதனால் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் இன்று அதிகாலை திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 

அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது என கூறப்படுகிறது . மேலும் இந்த கூட்ட நெரிசலால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதனால், பலர் ஒருவர் மீது ஒருவர் விழுந்தஇந்த சம்பவத்தில் 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் பெண்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A sudden stampede 30 injured at Maha Kumbh Mela


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->