சோனியாவை அவதூறாக பேசியதாக, அமித்ஷா மீது உரிமை மீறல் தீர்மானம்; காங்கிரஸ் நோட்டீஸ்..!
A violation of rights resolution against Amit Shah for defaming Sonia Congress notice
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது.
பேரிடர் மேலாண்மை மசோதா 2024 மீதான விவாதம் ராஜ்யசபாவில் நேற்று நடந்தது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: பிரதமரின் தேசிய நிவாரண நிதி காங்கிரஸ் ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது. தே.ஜ., கூட்டணி ஆட்சியில் பிரதமர் மோடியால் 'பிஎம் கேர்ஸ்' நிதி உருவாக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு குடும்பம் தான் நாட்டை கட்டுப்படுத்தியது என்று குறிப்பிட்டார்.

அத்துடன், பிரதமரின் நிவாரண நிதியில் காங்கிரஸ் தலைவரும் ஒரு அங்கமாக இருந்தார் என்றும், இதற்கு நாட்டு மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள். உங்களை யாரும் பார்க்கவில்லை. கவனிக்கவில்லை என நினைத்து கொண்டுள்ளீர்கள் என்று அவர்என்று அவர் பேசினார். ஆனால், இந்த நேரத்தில் அமித்ஷா தன்னுடைய குற்றச்சாட்டில் யாரின் பெயரையும் குறிப்பிடவில்லை என்பதும் கிறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமித்ஷாவின் பேச்சு அவை விதிகளை மீறுவதாகவும், சபையை அவமதிப்பது போல் உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டிள்ளார்.

இது தொடர்பாக அவர், ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மீது அவதூறான கருத்துகளை மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆக அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளிக்கிறேன் என்றும், சோனியாவின் பெயரை அவர் நேரடியாக சொல்லாவிட்டாலும், மறைமுகமாக அவரை பற்றிப் பேசி, அவர் மீது உள்நோக்கத்துடன் குற்றம்சாட்டிள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சோனியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், அவருக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமித்ஷா முன்வைத்தார் என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அமைச்சரின் குற்றச்சாட்டு தவறானது மற்றும் அவதூறானது என்று ஜெய்ராம் ரமேஷ் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
English Summary
A violation of rights resolution against Amit Shah for defaming Sonia Congress notice