சோகத்தில் பூனை பிரியர்கள்!... உலகின் மிக வயதான பூனை உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


பூனைகளை பெரும்பாலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர் 

அது மட்டுமல்லாமல் பூனைகளை தங்களது குழந்தையை போல நினைத்து அதற்குரிய வடிவிலான ஆடைகளை அமைத்து வளர்த்து வருகின்றனர். இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில், இங்கிலாந்து நாட்டில் உள்ள  நார்விச் நகரை சேர்ந்த ஓருவர், ரோஸி என்ற பூனையை வளர்த்து வந்துள்ளார்.

இந்த பூனை 1991-ம் ஆண்டு பிறந்த நிலையில், நடப்பு ஆண்டில்  ஜூன் 1 ஆம் தேதி தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. அது மட்டுமல்லாமல் உலகின் மிக வயதான பூனை என்ற பெருமையோடு வலம் வந்தது.

இந்த நிலையில், உடல்நலக்குறைவால் அவரது உரிமையாளரின் வீட்டில் உயிரிழந்தது. 33 ஆண்டுகள் வாழ்ந்த பூனை ரோஸியின் வாழ்நாளை மனித வாழ்நாளோடு ஒப்பிட்டால் இது 152 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 33 ஆண்டுகள் வாழ்ந்த பூனை உயிரிழந்த சம்பவம் பூனை விரும்பிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cat lovers in sadness Worlds oldest cat dies


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->