கேரளாவில் நிபா வைரஸ் தீவிரம்?...சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல் வெளியீடு! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில்  நிபா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 9-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


இதற்கிடையே பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு வந்திருந்த இவருடன் தொடர்பில் இருந்த அவரது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அதில் 5 பேருக்கு லேசான காய்ச்சல் அறிகுறிகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 


இந்நிலையில், அம்மாநில  சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இது குறித்து கூறுகையில், மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரசின் பரவலுடன் தொடர்புடைய நபர்களின் பட்டியலில் 175 பேர் உள்ளதாகவும், இவற்றில் 74 பேர் சுகாதார நல பணியாளர்கள் என்று கூறினார்.

மேலும்  மொத்தம் 126 பேர் முதன்மை தொடர்பு பட்டியலில் உள்ளதாகவும்,  49 பேர் இரண்டாம் நிலை தொடர்பு பட்டியலில் உள்ளதாக தெரிவித்த அவர், முதன்மை தொடர்பு பட்டியலில் உள்ளவர்களில் 104 பேர் அதிக ஆபத்து பிரிவில் உள்ளவர்கள் என வகைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இந்த பட்டியலில் உள்ளவர்களில் 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 தனி நபர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nipah virus severity in Kerala Health department shocking information release


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->