ஹேமா கமிட்டி அறிக்கை, நடிகைகளின் பாலியல் புகார் - அதிரவைத்த நடிகர் மம்முட்டியின் பதிவு! - Seithipunal
Seithipunal


ஹேமா கமிட்டி அறிக்கையை முழு மனதுடன் வரவேற்பதுடன், அதனை ஆதரிப்பதாகவும் மலையாள சொப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் முகநூல் பதிவில்,  "சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு, சமூகத்தில் உள்ள நல்லது, கெட்டது அனைத்தும் திரைப்படங்களில் எதிரொலிக்கும். தியுரையுலகத்தை மக்கள் (சமூகம்) உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே, திரைத்துறையில் நடக்கும் விவகாரங்கள் அனைத்தும் பெரிய விவாதமாக மாறும். திரைத்துறையில் அசம்பாவிதம் ஏதும் நடக்காத வண்ணம் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.

ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை முழு மனதுடன் வரவேற்கிறோம் மற்றும் ஆதரிக்கிறோம்.

அவற்றை செயல்படுத்த திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் வேறுபாடு இல்லாமல் கைகோர்க்க வேண்டிய தருணம் இது. இது தொடர்பாக எழுந்த பாலியல் புகார்கள் மீது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் நேர்மையாக விசாரிக்கட்டும், தண்டனைகளை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். சினிமாவில் 'பவர் குரூப்' என்பது கிடையாது. சினிமா என்பது அப்படி இருக்கக் கூடியது இல்லை.

ஹேமா கமிட்டி அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். சட்டத் தடைகள் இருந்தால் தேவையான சட்டம் இயற்ற வேண்டும்" என்று நடிகர் மம்மூட்டியின் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor mammootty say about Hema Committee report


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->