முன்னாள் காதலியின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவேன்; மிரட்டும் நடிகர்; போலீசார் வழக்கு..! - Seithipunal
Seithipunal


ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக, இளம்பெண்ணை மிரட்டி, 5 கிலோ வெள்ளி பொருட்களை பறித்த நடிகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

பெங்களூரு, மல்லத்தஹள்ளியில் வசிப்பவர் சரித் பாலப்பா என்ற கன்னட சின்னத்திரை நடிகர். இவர் 'முட்டுலட்சுமி' என்ற சீரியலில் நடித்து பிரபலம் அடைந்ததோடு, தெலுங்கிலும் நிறைய சீரியல்களில் நடித்து உள்ளார். நேற்று முன்தினம் சரித் பாலப்பா மீது, பெங்களூரு அன்னபூர்னேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தில் 29 வயது இளம்பெண் ஒருவர் புகாரளித்துள்ளார்.

அதில் அந்த பெண் குறிப்பிட்டுள்ளதாவது; 'லவ் லவிகே' என்ற கன்னட சீரியல் படப்பிடிப்பு 2018-ஆம் ஆண்டில் நடந்தது. அங்கு நான் சென்ற போது, அந்த சீரியல் நடிகர் சரித் பாலப்பாவுடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. எனது மொபைல் நம்பரை வாங்கி தினமும் பேசினார். பின், இருவரும் காதலித்தோம். திருமணம் செய்வதாக கூறி என்னிடம் உல்லாசமாக இருந்தார்.

ஆனால், கடந்த 2020-இல் எனக்கு துரோகம் செய்துவிட்டு, இன்னொரு பெண்ணை திருமணம் செய்தார். அவர் மீது நான் புகார் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அந்த பெண் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; திருமணத்திற்கு பின்னரும் என்னிடம் பேசினார். உல்லாசமாக இருக்க வரும்படி அழைத்தார். நான் மறுத்ததால் எனக்கு மிரட்டல் விடுத்தார். இதனால் போலீசில் புகார் செய்தேன். போலீஸ் நிலையத்திற்கு வந்து, இனி பிரச்னை செய்ய மாட்டேன் என்று எழுதி கொடுத்தார்.

கடந்த 2022-இல் மனைவியை விவாகரத்து செய்ததும், என்னை மீண்டும் சந்தித்தார். 'மீண்டும் காதலிப்போம்; உடலுறவு வைத்து கொள்வோம்' என்று என்னிடம் கூறினார். நான் மறுத்து விட்டேன்.

இதனால் நாங்கள் இருவரும் காதலித்த போது எடுக்கப்பட்ட, எனது ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டினார். என்னிடம் இருந்து 05 கிலோ வெள்ளி பொருட்களை வாங்கினார். தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. 

இதையடுத்து, சரித் பாலப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு டிசம்பரில், 29 வயதான நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரிலும், சரித் பாலப்பா கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் ஜாமினில் வெளியே இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor threatens to release pornographic photos and videos of ex girlfriend


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->