அ.ம.மு.க. கப்பலில் ஓட்டை விழுந்து இருக்கிறது - டி.டி.விக்கு ஆர்.பி உதயகுமார் பதில்.!
rb uthayakumar speech about ttv dinakaran
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொந்த நலனுக்காக அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தி விட்டார் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விமர்சித்தார். இந்த நிலையில் டி.டி.வி. தினகரனுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது:
அ.ம.மு.க. காற்றில் கற்பூரம் கரைவதுபோல் கரைந்து கொண்டிருக்கிறது. கட்சி தொடங்கியபோது இருந்தவர்கள் எல்லாம் நாள்தோறும் வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள். அ.ம.மு.க. கப்பலில் ஓட்டை விழுந்து இருக்கிறது.

அது எப்போது வேண்டுமானாலும் மூழ்கும் என்று தெரிந்துதான் நிர்வாகிகள் விலகுகின்றனர். டி.டி.வி.யிடம் இருந்து தப்பித்து பிழைத்தால் போதும் என்று அ.ம.மு.க. நிர்வாகிகள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
டி.டி.வி.தினகரன் 100 சதவீதம் விரக்தியில் பேசுகிறார். அ.ம.மு.க. தொண்டர் பெயர்களை வெளியிட்டால் அ.தி.மு.க. பலவீனமாக உள்ளதா? பலமாக உள்ளதா? என டி.டி.வி. புரிந்துகொள்வார். அ.தி.மு.க.வின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. அது குறித்து டி.டி.வி. கவலைப்பட வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
rb uthayakumar speech about ttv dinakaran