அதானி விவகாரம் பிரதமர் மோடியுடன் தொடர்புடையது - காங்கிரஸ் தரப்பில் பகீர் குற்றசாட்டு! - Seithipunal
Seithipunal


அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறிய வெளிநாட்டு நிறுவனத்தின் அறிக்கை குறித்து விசாரணை நடத்த, நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

அதே சமயத்தில், இந்திய ஜனநாயகம் குறித்து இங்கிலாந்தில் ராகுல் காந்தி பேசிய பேச்சுக்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று, ஆளும்கட்சியான பாஜகவும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 13 ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி மற்றும் ஆளும்கட்சி உறுதினர்களின் அமளியால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இதுநாள் வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அலுவல் பணிகூட நடைபெறவில்லை. ஆளும், எதிர்க்கட்சிகளும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றர்.

இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ''எதிர்க்கட்சிகளின் பொறுப்பற்ற தவறான குற்றச்சாட்டு காரணமாகவே நாடாளுமன்றம் முடக்கப்படு வருகிறது" என்று கருத்து தெரிவித்துள்ளார். 

இதற்க்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, ''மாநிலங்களவை ஆளும்கட்சித் தலைவரான பியூஷ் கோயல் தனது எம்பிக்களைக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பேசவிடாமல் தடுத்துவிட்டார். 

அதானி விவகாரம் பிரதமர் மோடியுடன் தொடர்புடையது. இதுகுறித்து விசாரணை குழு அமைக்க மறுக்கும் மத்திய அரசு, ராகுல் காந்தி மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்வைத்து அமளி செய்து வருகின்றனர்" என்று காங்கிரஸ் கட்சி சார்பாக குற்றம்சாட்டபட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adani Issue Congress against PMModi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->