34 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்! தொடரும் பயங்கரவாதிகள் தாக்குதல்! 3000 ராணுவ வீரர்கள் குவிப்பு! - Seithipunal
Seithipunal


ஜம்மு பகுதியில் பயங்கரவாதிகளை ஒழிக்க கூடுதலாக 3000 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து ராணுவ பாதுகாப்பு படை வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது. 2021 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 34 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஜம்முவில் கடவா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் துப்பாக்கி சூடு சண்டை நடைபெற்றது.  இதில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பாதுகாப்புவீரர்கள் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராணுவ கேப்டன் மற்றும் 4 வீரர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக தேடுதல் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பயங்கரவாதிகளுக்கு உதவி செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

ஜம்மு பகுதியில் பதுங்கி உள்ள தீவிரவாதிகளை கண்டுபிடிக்க ஜம்மு காஷ்மீர் போலீசார் உடன் ராணுவ வீரர்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து 40 பயங்கரவாதிகள் பாதுகாப்பு வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

500 வரையிலான சிறப்பு படைவீரர்கள் ஒரு வாரத்திற்கு முன்பாக ஜம்மு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தெற்கு பகுதியில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் அப்பகுதிகளுக்கு கூடுதலாக 3000 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

additional 3000 soldiers have been mobilized to eliminate terrorists in Jammu region


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->