அத்வானிக்கு என்ன ஆச்சி? மருத்துவமனையில் மீண்டும் அனுமதி ! அதிர்ச்சியில் பாஜக தலைவர்கள்! - Seithipunal
Seithipunal


உடல் பரிசோதனைக்காக பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் துணை பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான அத்வானி கடந்த ஜூன் 26 ஆம் தேதி உடல்நல குறைவு ஏற்பட்டு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டங்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு 96 வயது என்பதால் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட  உடல் நலக் குறைவுதான் என்று எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் தெரிவித்தது.

முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு சிறுநீரகவியல் மருத்துவத்துறையை  சேர்ந்த சிறப்பு மருத்துவர் நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில், பாஜக முகத் தலைவர் அத்வானி மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக உள்ளதாக அத்வானி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Advani admitted to hospital for physical examination


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->