51 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ரெயில் சேவை.!! - Seithipunal
Seithipunal


 51 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ரெயில் சேவை.!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் பஹனாகா என்ற இடத்தில் மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளாகி 17 ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து விபத்து நடைபெற்ற இடத்தில் உள்ள ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டது. 

இதையடுத்து தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள், சரக்கு ரெயில் பெட்டிகள் என்று அனைத்து ரெயில் பெட்டிகளும் ஏழு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. இதையடுத்து, தண்டவாளங்கள் மற்றும் மின் இணைப்புகள் சீரமைக்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்றது.

ஒடிசாவில் ரெயில் விபத்து நடந்து 51 மணி நேரமான நிலையில் சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்து வழக்கம் போல் ரெயில் சேவை தொடங்கியது. சீரமைக்கப்பட்ட பாதையில் சென்ற சரக்கு ரெயிலை, அங்கிருந்த மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உற்சாகமாக வழியனுப்பி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

again train service start in odisa after 51 hours


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->