பாராளுமன்ற தேர்தல் முடிவு ''மதவாத அரசியலுக்கு'' முற்றுப்புள்ளி... - அகிலேஷ் யாதவ் தாக்கு.! - Seithipunal
Seithipunal



ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவரும், கட்சியின் மக்களவை குழு தலைவருமான அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியிருப்பதாவது, 

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு பெரிய வெற்றி ஆகும். இந்தியா கூட்டணிக்கான பொறுப்பை தேர்தல் மூலம் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். 

மதவாத அரசியலுக்கு இந்த தேர்தல் முடிவு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மேலும் ஜூன் 4-ம் தேதி வகுப்புவாத அரசியலில் இருந்து சுதந்திரம் பெறப்பட்டது. இந்த தேர்தல் நேர்மறை அரசியலின் புதிய சகாப்தம். 

மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீது நேற்றும் நம்பிக்கை இல்லை, இன்றும் நம்பிக்கை இல்லை. 80க்கு 80 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்றாலும் நம்பிக்கை வராது.  

சமூக நீதிக்காக சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம். ராணுவத்திற்கு ஆட்களை சேர்க்க அக்னிபத் திட்டத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Akhilesh says parliamentary election results end communal politics


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->