மகா கும்ப மேளா 2025; பலி எண்ணிக்கை அதிகரிப்பு; நிர்வாக பணிகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்..! - Seithipunal
Seithipunal


144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி உத்தர பிரதேசத்தில் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. 45 நாட்கள் வரை நடக்கும் மகா கும்பமேளா நிகழ்ச்சி எதிர்வரும் பிப்ரவரி 26-ந்தேதி முடிவடையவுள்ளது. 

உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

தை அமாவாசை தினமான இன்று மகா கும்பமேளாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 

இந்த கூட்ட நெரிசலால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், கும்பமேளாவில் உயிரிழந்த பக்தர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காயமடைந்தவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் சிறந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட வேண்டும்.

இறந்தவர்களின் உடலை அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அரசிடம் கேட்டுக் கொள்கிறேன். 

உலகத் தரம் என்ற வார்த்தைக்கு பின்னால் உள்ள உண்மை தற்போது அம்பலமாகிவிட்டது. பொய்ப் பிரசாரம் செய்தவர்கள் இந்த விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். 

மகா கும்பமேளாவுக்கு வந்த துறவிகள் மற்றும் பக்தர்களிடையே பாதுகாப்பு நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த நிர்வாகம் மற்றும் மேலாண்மை பொறுப்பை மாநில அரசிடம் ஒப்படைக்காமல், உடனடியாக இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Akhilesh Yadav says that the administrative work of the Maha Kumbh Mela should be handed over to the Army


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->