நாட்டில் எல்லாருக்கும் பேசுவதற்கு உரிமையுள்ளது - மோடி முன்பு விலாசிய அசோக் கெலாட்.!!
all peoples right to speak in country ashok kelat speach
நாட்டில் எல்லாருக்கும் பேசுவதற்கு உரிமையுள்ளது - மோடி முன்பு விலாசிய அசோக் கெலாட்.!!
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வளர்ச்சித்திட்ட பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசினார். அந்த விழாவில், அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
"நாட்டில் பகைமைக்கு இடம் கிடையாது. சித்தாந்த சண்டைகளுக்குத்தான் இடமுண்டு. எல்லோருக்கும் பேசுவதற்கு உரிமையுள்ளது. நாட்டில் அனைத்து பிரிவினரிடமும் அன்பும், சகோதரத்துவமும் தான் இருக்க வேண்டும். முதலில் எதிர்கட்சிகளை மதிக்க வேண்டும்.
இந்த திசையில் பிரதமராகிய நீங்களும் செல்வீர்கள் என்று நான் கருதுகிறேன். இது நடந்தால், ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து நாட்டுக்கு இன்னும் அதிக வீரியத்துடன் செயல்பட முடியும்.
நாட்டின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதற்காகவே தான் உயிரை விட்டார். ஆனால், அவர் பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் உருவாவதை அனுமதிக்கவில்லை. அதேபோல், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் படுகொலை செய்யப்பட்டார்.
ஆகவே நாம் அனைவரும் ஒற்றுமையாய் இருந்தால் மட்டுமே நாடு ஒன்றாக இருக்கும். இது நாட்டில் பதற்றமும், வன்முறையையும் தடுத்துவிடும். பிரதமாராகிய நீங்கள் விடுக்கும் செய்தி, நாட்டை ஒன்றுபட்டிருக்கச் செய்யும் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் பேசியுள்ளார்.
English Summary
all peoples right to speak in country ashok kelat speach