ஜூன் 4 க்கு பின் ''காங்கிரசை கண்டுபிடிக்கும் யாத்திரை'' - அமித்ஷா கடும் தாக்கு.!
Amit Shah says after June 4 Rahul Gandhi yatra issue
மக்களவைத் தேர்தலில் 5 ஆம் கட்டவாக்கு பதிவு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 6 ஆம் கட்ட வாக்கு பதிவு வருகின்ற 25ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு நடைபெறும். எனவே அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பல்வேறு இடங்களில் பேரணி நடத்தி தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியிருப்பதாவது, முதல் நான்காம் கட்ட வாக்கு பதிவிலேயே பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க 270 இடங்களுக்கு மேல் வெற்றியடைய தெரிந்து விட்டது. மீதமுள்ள மூன்று கட்ட தேர்தலும் முடியும் போது பா.ஜ.க 400 க்கு மேல் இடங்களை கடந்து விடும்.
காங்கிரஸ் 40 இடங்களை கூட பெறாது. காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி இந்தியா ஒற்றுமையாக மேற்கொண்டார். ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு அவர் காங்கிரசை கண்டுபிடிக்கும் யாத்திரை மேற்கொள்வார்.
அதன் பிறகு பைனாகுலர் மூலம் கூட காங்கிரசை பார்க்க முடியாது. இந்தியாவில் கோடை வெயில் அதிகரித்து வருவதால் ராகுல் காந்தி தாய்லாந்து, பாங்காங் என ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுக்குப் பிறகு சென்று விடுவார்.
இதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒருபுறம் பணக்கார குடும்பத்தில் பிறந்த ராகுல் காந்தி மறுபுறம் ஏழை குடும்பத்தில் பிறந்த பிரதமர் மோடி. இதில் யார் வேண்டும் என நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.
நீங்கள் எங்களுக்கு 400 இடங்களை தாருங்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரான இட ஒதுக்கிட்டை பா.ஜ.க அரசு செய்யும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Amit Shah says after June 4 Rahul Gandhi yatra issue