இவர்கள் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்களுக்கு எதிரானவர்கள்... அமித் ஷா பகீர் குற்றசாட்டு.! - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹரியானா, மகேந்திர கார் நகரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மாநாடு இன்று நடைபெற்றது. 

இதில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியிருப்பதாவது, காங்கிரஸ் கட்சி எப்போதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக உள்ளது. ஓ.பி.சிக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் இந்த ஆலயம் உருவாக்கப்பட்டது. 

இருப்பினும் காங்கிரஸ் கட்சி இந்த பரிந்துரைகளை கடந்த சில ஆண்டுகளாக அமல்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் அவர், 1980 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி மண்டல் கமிஷனை கிடப்பில் போட்டு விட்டார். 

1990 ஆம் ஆண்டு அது ஏற்றுக் கொள்ளப்பட்ட போது ராஜீவ் காந்தி சுமார் 2:30 மணி நேரம் பேசிவிட்டு ஓபிசி இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பறித்த காங்கிரஸ் முஸ்லிம்களிடம் கொடுத்துவிட்டது.

ஹரியானாவில் அவர்கள் வெற்றி பெற்றால் இதே முறையை செயல்படுத்துவார்கள். ஹரியானாவில் முஸ்லிம் இட ஒதுக்கீட்டை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என உறுதி செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit shah says congress always anti backward classes


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->