8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை!...3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜெயசிங், மணீஷ் திர்கி, முகேஷ்சிங் மற்றும் முனீம் சிங்  ஆகிய 4 பேர், கர்நாடக மாநிலம், மங்களூருவில்  ஓடு தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். இவர்களுடன் பணி செய்த மற்றொரு  நபரின் சிறுமி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்து உள்ளார்.

அப்போது அங்கு வந்த இளைஞர்கள் சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து, காரில் ஏற்றி சென்றனர். தொடர்ந்து, அப்பகுதியில் பாழடைந்த கட்டிடம் அருகே காரை நிறுத்தி, சிறுமியை 3 பேர் வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளனர். இதில், மூச்சுத்திணறி சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இ்ந்த சம்பவம் குறித்து  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி 3 வாலிபர்களை கைது செய்த நிலையில், சிறுமியின் தாயின் புகாரின் அடிப்படையில், வழக்கு தொடர்பாக 30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிறுமியை கற்பழித்து கொலை செய்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் ஜெயசிங், முகேஷ்சிங், மணீஷ் திர்கி ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனையும், தலா ரூ.1.20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பத்தில் 4-வது குற்றவாளியான முனீம் சிங் இன்னும் தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

An 8 year old girl was raped and killed 3 people were sentenced to death and action was taken


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->