லாரி - கார் நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து! அப்பளம் போல் நொறுங்கிய கார்! உடல்நசுங்கி பலியான உயிர்கள்! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம், காளஹஸ்தி அருகே சாலை விபத்தில் ஆறு பேர் பலியான சோக சம்பவம் அரங்கேறி உள்ளது.

விஜவாடாவை சேர்ந்த 8 பேர்திருப்பதி மற்றும் காளஹஸ்தி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் திரும்பிய போது, எதிரே வந்த லாரியில் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளுக்கு இடையே மீட்கப்பட்ட இருவர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து வெளியான முதல் கட்ட தகவலின் படி, விஜயவாடாவை சேர்ந்த எட்டு பேர் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, காளகஸ்திக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர்.

பின்னர், காளகஸ்தியில் சாமி தரிசனம் முடித்துவிட்டு, விஜயவாடாவுக்கு எட்டு பேரும் தங்களது காரில் புறப்பட்டு செல்லும் வழியில், எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் இவர்களின் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிவேகமாக இரண்டு வாகனங்களும் மோதி கொண்டதால், லாரிக்கு அடியில் கார் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் பலியாகியுள்ளனர். இரண்டு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra Pradesh Lorry Car Accident 09072023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->