மதுபானக் கொள்கை வழக்கு - அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு.! - Seithipunal
Seithipunal


டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதியன்று இரவு கைது செய்யப்பட்டார். 

தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே சமயம், டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. பின்னர் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஜூன் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது. 

இந்த இரண்டு வழக்கையும் விசாரணை செய்த நீதிமன்றம் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனால் சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் உள்ளார். 

இந்த நிலையில், சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றோடு நிறைவடைந்ததால், அவர் இன்று டெல்லி நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, அவரின் நீதிமன்ற காவலை வரும் 20ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையை வரும் 12ம் தேதி நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aravind kejriwalin court custody extened


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->