காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகபோகும் அசோக் கெலாட்! அடுத்த வாய்ப்பு யாருக்கு உள்ளது!
Ashok Khelat will withdraw from the Congress president race Who has the next chance
ராஜஸ்தான் முதல்வர் தேர்வில் ஏற்பட்டுள்ள சிக்கலினால் காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகியதாக தகவல்!
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 17ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் தற்பொழுது ராஜஸ்தான் காங்கிரஸில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதாக ராகுல் காந்தியை சந்தித்த பின் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கேரளாவில் அறிவித்து இருந்தார். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியின் "ஒருவருக்கு ஒரு பதவி" கொள்கை பின்பற்றப்படுவதால் அவர் முதல் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால் அசோக் கெலாட் முதல்வர் பதவியில் நீடிக்க விரும்பினார்.
மொத்தம் 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில் காங்கிரசுக்கு 108 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் சச்சின் பைலட்டுக்கு 20 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ள நிலையில் அவர் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என செய்திகள் வெளியாகின. இதன் காரணமாக அசோக் கெலாட் ஆதரவு 80 எம்எல்ஏக்கள் சச்சின் பைலட்டுக்கு எதிராக போர் கொடி தூக்கினார்.
இதன் காரணமாக புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்த மல்லிகார்ஜுனன் கார்கே மற்றும் அஜய் மகான் ஆகியோர் நேற்று முன்தினம் ராஜஸ்தான் புறப்பட்டு சென்றனர். அசோக் கெலாட் ஆதரவு 82 எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்ததால் நடைபெறவில்லை. அவர்கள் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர்.
இந்த சூழலில் அசோக் கெலாட் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோற்றுவிடும் என்ற சாந்தி தாரிவால் என்ற அமைச்சர் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகினால், அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூர் போட்டியிடுவார் என தெரியவருகிறது. மேலும் சில காங்கிரஸ் தலைவர்களும் போட்டியிட முயற்சி மேற்கொண்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறப்படுகிறது.
English Summary
Ashok Khelat will withdraw from the Congress president race Who has the next chance